நடைமுறையில் முழுமைபெறாத அரச கரும மொழி அமுலாக்கம்

நமது நாட்டில் மொழி அமுலாக்கம் முழுமையாக நடை முறையில் இருக்கி றதோ? இல்லையோ? அரசாங்க மட்டத்தில் அரச கரும மொழி அமுலாக் கம் பேசப்பட்டு வரும் சொல்லாகிவிட்டது. அதுமட்டுமல்ல இது அடிக்கடி நமது காதுகளில் ஒலிக்கும் வார்த்தை. இந்த நாட்டில் தமிழும், சிங்களமும் அரச கரும மொழிகள். அரசியல் யாப்பிலும் இது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழியை அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டு ள்ள சிக்கல் இதுவரை தீர்ந்ததாக இல்லை. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மொழி அமுலாக்கலுக்கான கொள்கைகளை பிரகடனப்படுத்தினவேயொழிய நடை முறைப்படுத்தலில் இருந்த தடைகளை அகற்ற முயலவில்லை. ஆனால், அரசு எடுத்திருக்கும் யதார்த்தத்துடனான நடவடிக்கை புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் பல் வேறு கரங்களால் அது முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. இதற்கு, தமிழ் மொழி பயிற்சி வழங்கக் கூடிய போதிய வேலைத் திட்டங்கள் இல்லாமை யும், அரசாங்க நிறுவனங்களில் தமிழில் செயலாற்றக் கூடியவர்கள் பற்றாக் குறையாக இருப்பதும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுக்கின்ற எந்தவொரு விடயமும் முறைச் சாத் தியமானதாக இருந்தால் மட்டுமே சிறந்த பிரதிபலனைப் பெறக்கூடியதாக இருக்கும்.

மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கென அரசகரும மொழிகள் ஆணைக்குழுசெயற்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பணி இருக்கிறது. ஆயினும் இப்போதுதான் அது உசுப்பிவிடப்பட்டிருக்கிறது.

மொழி அமுலாக்கலை ஊக்குவிக்கும் வழியில் நடைமுறைச் சாத்தியமான மூன்று நூல்களை ஆணைக்குழு வெளியிட்டது. பொலிஸாருக்கான உரையாடல் எனும் மும்மொழி சொற்றொடர் நூல், பேச்சுத் தமிழில் 40 மணித்தியால அடிப் படைப் பயிற்சி, மொழிவளத் தேவைகள் கணிப்பீட்டு ஆய்வு ஆகிய மூன்று முக் கிய நூல்களே அவைகள்.

இதுமட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமான பல்வேறு சிபார்சுகளையும் மொழி அமுலாக்கல் ஆணைக் குழு வெளியிட்டது. பொலிஸாருக்கான உரையாடல்கள் எனும் மும்மொழி சொற்றொடர் நூல், பேச்சுத் தமிழில் 40 மணித்தியால அடிப் படைப் பயிற்சி, மொழிவளத் தேவைகள் கணிப்பீட்டு ஆய்வு ஆகிய மூன்று முக் கிய நூல்களே அவைகள்.

இதுமட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமான பல்வேறு சிபார்சுகளையும் மொழி அமுலாக்கல் ஆணைக்குழு முன்வைத்திருக்கிறது. அமுலாக்கத்திற்கு அடிப்படைத் தடையாக இருக்கின்ற ஆளணிப் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு ஆணைக்குழு ஆலோசனை முன்வைத்திருப்பது மொழி அமுலாக்கத்தில் அது கொண்டுள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே, இந்த ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு விதந்துரை கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதென்பதை நாம் அழுத்த மாகச் சொல்லியே ஆகவேண்டும்.

அரசாங்க வேலைகளில் இணைந்தவர்கள் ஐந்து வருடங்களுக்குள் இரண்டாவது மொழித் தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற விடயமும் அரச கரும மொழிகள் தேர்ச்சிக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க வேண்டுமென்ற விடயமும் ஆணைக் குழுவினால் முன்வைக்கப்பட்டு அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகிறதென்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இத்தகைய செயற்பாடுகள் மொழியைக் கற்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் உத்வேகத்தையும் அரசாங்க அதிகாரிகள் ஊழியர்கள் மட்டத்தில் ஏற்படுத்தியிருக் கிறது. தமிழ் பேசுவோர் மத்தியில் சிங்களத்தின் தேவையும் சிங்களம் பேசுவோர் மத்தியில் தமிழின் அவசியமும் உணர்த்தப்பட்டிருக்கின்றன. இது தற்போதைய அர சாங்கத்தின் மொழி அமுலாக்கல் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே கொள்ள முடியும்.

உண்மையில் அரசாங்கமோ அல்லது அரச கரும மொழிகள் ஆணைக்குழுவோ எடுக்கின்ற நடவடிக்கைகள் எத்தகைய நடைமுறைச் சாத்தியமானதாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகள் மட்டத்தில் முழுமையான மனமாற்றம் ஏற்பட்டாலே எத னையும் சாதிக்க முடியும். இவர்களின் கள்ளம் கபடமற்ற செயற்பணி நாட்டிற்கு அவசியம் தேவைப்படுகிறது.

மொழித் தகைமையுள்ளோரின் ஆளணிப் பற்றாக்குறை தங்களது திணைக்களங் களில் நிலவுமாக இருந்தால் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து தக்க பதிலீட்டு நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். போதிய ஆளில்லை என்பதை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுவது ஏற்புடையதல்ல.

அதனை அலட்சியப் போக்காகவே கொள்ள முடியும். சில அரச அதிகாரிகளின் இனவாதப் போக்கும் அரசின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டிருக்கி றது. ஆகவே, அத்தகைய அதிகாரி தங்களது கெட்ட சிந்தனைகளை வீசிவிட்டு நாடு, மக்கள் என்ற உயரிய அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply