அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை, வடகிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் உள்ளடக்கியதாகவே அமைய வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
வடகிழக்குப் பிராந்தியத்தின் அதிகார பகிர்வு தொடர்பானதாக இருக் கும் பட்சத்தில், வடக்கிலிருந்து அகதி களாக்கப்பட்டு புலம் பெயர்ந்துள்ள சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களுடைய எதிர்காலம் பற்றியும், கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றியும் முஸ்லிம் தலைவர்கள் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு இடமளிக்கும் வகையில், அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் உள்ளடக்க வேண்டும்.
இதன் மூலம் இனப் பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதும் சகல சமூகங்களினதும் இணக்கப்பாட்டுக்கு உரியதுமான தீர்வினை அடைய முடியும்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது தனியொரு இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. வடக்கு, கிழக்கைத் தாயகமாக கொண்டுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்குமே உரிய தீர்வாக அமைய வேண்டும் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply