யாழில் இரண்டாயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய சிறைச்சாலை

இரண்டாயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய இடவசதி கொண்ட புதிய சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் புதிய சிறைச்சாலை யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள காணியில் அமைக்கப்படவுள்ளது.

இந்தச் சிறைச்சாலை அமைப்பதற்கான நிதியை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு வழங்கவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply