குடாநாட்டில் குடிநீர் பிரச்சினை: விஜயகலா மகேஸ்வரன்
யாழ்ப்பாண குடாநாட்டைச் சேர்ந்த மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் கிணறுகளில் கடல் நீர் கலப்பதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடல் நீர் கலப்பதனால் குடி நீர் உப்புத்தன்மையுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் பிரச்சினைக்கு அரசாங்கம் கூடிய விரைவில் தீர்வு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
காரைநகர், அரியாலை, வல்வெட்டித்துறை, வட்டுக்கோட்டை மற்றும் தீவகப் பகுதி மக்கள் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு பவுசர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த எழுபது ஆண்டுகளின் பின்னர் யாழ்பாணத்தில் இந்த அரசாங்கம் குடிநீர்த் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நீர் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply