ஈழத் தமிழர்களுக்காய் ரஜனி குரல் கொடுக்க வேண்டும்: தீபச்செல்வன்

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் பொழுது திரைத்திரையினருடன் கலந்து நடிகர் ரஜனிகாந்த் குரல் கொடுத்தார் என்று குறிப்பிட்ட ஈழ கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன் நடிகர் ரஜனிகாந்த் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக சூப்பஸ்டாராக செல்வாக்குப் பெறுபவர் என்று குறிப்பிட்டார்.

ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஈழத்தில் ரஜனிகாந்த் தொடர்பில் இந்தியா டுடே பத்திரிகையில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா டுடே பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை முழுமையாக தருகிறோம்.

போரும் இடப்பெயர்வும் அலைச்சலும் பலிகளும் நிறைந்தஈழத்து வாழ்வில் எக்காலத்திலும் தமிழகத்துத் திரைப்படங்கள் செல்வாக்குச்செலுத்தியே வந்திருக்கின்றன. போருக்கு முன்பாக தமிழகத்தின் தொடக்காலத்திரைப்படங்கலிருந்து போர்க்காலங்களில் வெளியான திரைப்படங்கள்வரை போர் ஓய்ந்ததருணங்கில் பொழுது போக்கிற்காக பார்க்கப்பட்டிருக்கின்றன. போராடும் மக்கள்தமிழகத்து திரைப்படங்களை பார்க்க வேண்டுமா என்பது குறித்தும் ஈழப் போராளிகளானவிடுதலைப் புலிகள் பரிசீலனை செய்து வந்திருக்கிறார்கள். முக்கியமான நெருக்கடிக்காலகட்டங்களில் தமிழத்துப் படங்கள் தடைசெய்யப்பட்டு போராடும் மக்கள் பார்க்க வேண்டியபன்மொழிப் படங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்து திரைப்படங்களில் சமூகத்தை சீரழிக்கும்காட்சிகளைக் கொண்ட படங்களையும் அப்படியான காட்சிகளையும் விடுதலைப் புலிகள்தடைசெய்திருந்தார்கள். இளைஞர்களை சீரழிக்கிற வகையில் வழிகாட்டும் ஆபசம் மிகுந்தபடங்களை அவர்கள் தடை செய்திருந்தார்கள். அது போராடும் ஒரு மக்கள் கூட்டத்தி;ற்கு அவசியமற்றதாகவும்இருந்தது. தொடர்புகள் பாதிக்கப்பட்டீருந்த காலங்களிலும் தமிழகத்தில் திரைப்படங்கள்வெளியாகும் அதே நாட்களில் தமிழகப் படங்கள் ஈழத்திலும் வெளியாகியிருக்கின்றன.யாழ்ப்பாணத்தில் உள்ள பழம் பெரும் திரையரங்குகளில் நடிகர் எம்.ஜி.ஆர் வந்;திருக்கிறார். இன்றும்அந்தத் திரையரங்குகளில் அவர்கள் வரும் பொழுது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்கொலுவப்பட்டிருக்கின்றன.

போர் ஓய்ந்த தருணங்களில் பொழுது போக்கிற்காகதிரைப்படங்கள் பார்க்கப்பட்ட பொழுது நடிகர் ரஜனிகாந்தின் படங்களும்திரையிடப்பட்டுள்ளன. ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடைசெய்திருக்கவில்லை. படங்களின் பகுதிகளையும் தடைசெய்திருக்கவில்லை. ஈழத்து மக்கள்பலரால் ரஜனிகாந்தின் படங்கள் ரசித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில்இருந்த திரைப்படம் பார்க்கும் சூழலைவிட வன்னியில் இருந்த திரைப்படம் பார்க்கும்சூழல் வித்தியாசமானது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா போன்ற பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ளதைப்போல பெரும் திரையரங்குகள் உள்ளன. வன்னியில் இன்றுவரை திரையரங்குகள் இல்லை.மினித்திரையரங்குகள் மட்டும் உள்ளன.

வன்னியில் பேரால் திரையரங்குகள் அழிந்துவிட்டன.பராசக்தி என்ற திரையரங்கு வன்னியில் 1990களுக்கு முன்பாக மிகவும் பிரபலமானது. 1990களில் ஏற்பட்ட யுத்தசூழலால் அங்கு திரைப்படங்கள் ஓடாமலும் 1995களில் ஏற்பட்ட யுத்த சூழலால் அவை அழிந்தும்போய்விட்டது. இடம்பெயர்ந்த இடங்களில் சிறிய திரைகளைக் கொண்ட மினித்திரையரங்குகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொண்ட திரையரங்குகளும்இயங்கியிருக்கின்றன. மிக அதிகமாக வீடுகளில் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளில்திரைப்படங்கள் ஓடியிருக்கின்றன. அவற்றை குறிப்பிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தமக்கள் பார்ப்பார்கள்.

வன்னியில் பெரும் போர் மூண்டிருந்த ஒரு காலத்தில்கிளிநொச்சி நகரத்தைவிட்டு நாங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். மிக நீண்ட தூரத்தில்உள்ள அக்கராயன் என்ற கிராமத்தில் தஞ்சமடைந்திருந்தோம். எனது பெரியம்மா மூன்றுமுறிப்பு என்ற காட்டுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்தார். 1996இல் நடந்திருந்தது. அப்பொழுதுஅவர்களின் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது அருகில் உள்ள சிறிய மினித்திரையரங்கில்ரஜனிகாந் நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை என்ற திரைப்படத்தைப் பார்திருந்தேன்.எண்பதுகளில் வெளியான அந்தத் திரைப்படத்தை அப்பொழுதுதான் நான் பார்த்திருந்தேன்.இடம்பெயர்ந்த அந்த நாட்களிலும் அந்தத் திரைப்படத்தை பார்க்க முடிந்தது.

அன்று திரைப்படங்களைப் பார்க்க நமக்கு இருந்த சூழல்மிகவும் இக்கட்டானது. வசதியற்ற திரையங்குகள்தான் இருந்தன. எல்லாவற்றையும் விட்டுஓடிக் கொண்டிருந்தோம். இருக்க வீடற்று காடுகளிலும்p மரங்களுக்கு கீழாகவும் மக்கள்இருந்த சூழலில் திரையரங்குகளை அமைப்பது அவற்றை எத்தனை நாட்களுக்காக அnமைப்பது என்ற கேள்விகளால்எங்கேனும் தற்காலிகமாக கிடைத்த பொருட்களில் அமைக்கப்பட்ட கொட்டகைகளினுள்திரைப்படங்கள் ஓடின. திரைப்படங்கள் பார்க்கும் தருணத்தில் விமானங்கள் வந்தால்தெரியாது செல் அடி;த்தால் விளங்காது என்பதால் திரைப்படங்கள் மிகவும் அஞ்சிக் கொண்டும் பார்க்கவேண்டியிருந்தது. அக்காலத்திலும் சில திரைப்படங்களை மக்கள் விரும்பிப் பார்த்தார்கள்.அதில் ரஜனிகாந்தின் படங்கள் முக்கியம் பெறுகின்றன.

எனது நண்பர்கள் இருவருக்கு அவர்களின் பெற்றோர்கள்ரஜனிகாந் என்று பெயர் வைத்திருந்தார்கள். இருவரும் 1983இல் பிறந்தவர்கள். ஒருவன்கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்து நான் படித்த பாடசாலையில் என்னுடன் படித்திருந்தான்.மற்றவன் யாழ்ப்பாணத்தில் பிறந்து இடம்பெயர்ந்த காலத்தில் அக்கராயனில் என்னுடன் ஒருஅகதிக்குடியிருப்பில் வசித்திருந்தான். இவர்களின் பெற்றோர்கள் நடிகர் ரஜனிகாந்தன்ரசிகர்கள். அவரின் திரைப்படங்களின் பாதிப்பாhல் அந்தப் பெயரை தங்கள் பி;ள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.கடந்த மூன்று தசாப்தத்தைச் சேர்ந்த ஈழத்து மக்கள் ரஜனிகாந்தின் ரசிகர்களாகஉள்ளார்கள்.

1999இற்குப் பிற்காலத்தில் வெளியானரஜனிகாந்தின் படங்கள் பலவும் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கின்றன. சமாதானகாலங்களில் ஈழத் தமிழ் வெகுசன மக்களால் அவை விரும்பிப் பார்க்கப்பட்டுள்ளன. அப+ர்வராகங்கள், முள்ளும்மலரும், பதினாறுவயதினிலே, மூன்றுமுடிச்சு, மூன்றுமுகங்கள்,தர்மத்தின்தலைவன்,தர்மத்துரை போன்றதிரைப்படங்கள் எண்பதுகளின் காலகட்டத்து ஈழத்து மக்களுடன் பின்னர் உருவாகியதலைமுறைகளிடத்திலும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தன. காலம் கடந்தும் மினித்திரையரங்குகளிலும் வீட்டு முற்றங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்ஓடியிருக்கின்றன. குறித்த திரைப்படங்களின் பாடல்கள் இலங்கைத் தமிழ் வானொலிகளிலும்பேரூந்துகளிலும் ஒலிபரப்பட்டன. இன்றும் ஒலிக்கின்றன. இலங்கை வானொலிகள் ராஜனிகாந்தின்படங்களையும் அவர் நடித்த படப்பாடல்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளை அமைத்துஒலிபரப்புகின்றன.

பாட்ஷா, முத்து, படையப்பா, போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியானகாலகட்டத்திலேயே வெளியாகி திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியிருக்கின்றன. சந்திரமுகிஈழத்தில் பெரியளவில் ஓடவில்லை. அதைப்போலவே குசேலன் படமும் ஓடவில்லை. சிவாஜி,எந்திரன் போன்றதிரைப்படங்களும் நன்றாக ஓடியிருந்தன. தமிழகத்துத் திரைப்படங்களிலிருந்து ஈழத்துசினிமா வேறுபடுகிறது. ஈழத்து சினிமா இலட்சியம் சார்ந்த கருத்துக்களையும்மக்களிடத்தில் கொண்டு செல்லுகின்றன. போர் சார்ந்த அவலங்களை பதிவு செய்கின்றன.அடுத்த கட்டமான பொழுது போக்குத் தேவைகளுக்காக தமிழகப்படங்கள் பார்க்கப்பட்ட பொழுதுரஜனியின் திரைப்படங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருந்த பொழுதுதமிழகத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் தமிழ்த் திரையினருடன் நடிகர் ரஜனிகாந் கலந்துகொண்டு ஆதரவளித்தார். ஈழத்து மக்கள் ஈழப்போராட்டத்திற்காகவும் இனி அழிப்புக்குஎதிராகவும் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள். பெரும் ரசிகர்கூட்டம் கொண்ட ரஜனிகாந் ஈழத் தமிழ் மக்களுக்காக அன்று ஆதரவளித்தது போல தொடர்ந்தும்ஈழத்து தமிழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமை பெற குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில்ரஜனிகாந்த் மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படும் சூப்பஸ்டார்என்பதை இறுதியாக அழுத்திச் செல்ல வேண்டும்.

ரஜனிகாந் சாதாரண மக்களை கவரும் நடிப்பைவெளிப்படுத்துபவர். இவரது ஸ்டைல்கள் ஈழத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடத்திலும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ரஜனி படம் என்கிற ஈர்ப்பு அவர்களிடத்தில்வெகுவாகவே இருக்கிறது. போர்ச் சூழலில் வாழும் எங்கள் மத்தியில் திரைப்படங்களைப்பார்க்கும் காலமும் சூழலும் இருப்பதென்பது மிகவும் சிக்கலானது. எனினும் போர் ஓய்ந்த தருணங்களில் தடைகளைத் தாண்டிஈழத்து மக்களின் பொழுது போக்குச் சாதனத்தில் இன்று அதிகம் முக்கியம் பொறும்சினிமாவில் தமிழகச் சினிமாவே மிகவும் தாக்கம் செலுத்துகிறது.

அப்படிப்பபார்க்கப்பட்ட படங்களில் ரஜனி படங்கள் அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. ரஜனிக்கு பலர் ரசிகர்களாகியுள்ளனர். நெருக்கடியான சூழல்களைக் கடந்து வாழும்மக்களிடத்தில் நடிகர் ரஜனிகாந்த் பெறுகிற ரசிப்புத்தன்மை முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நடிகராக ஒரு கலைஞராக தமிழகமக்களிடத்தில் செல்வாக்குள்ளவராக நடிகர் ரஜனிகாந்த் ஈழத்து மக்களுக்கு என்னசெய்வார்? தமிகத்தின்ஒவ்வொரு உறுவுகளுக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. நாம் அதை எதிர்பார்க்கிறோம்.

– தீபச்செல்வன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply