கிழக்கு மாகாண சபையின் தோற்றத்தின் பின்னர்தான் கிழக்கில் அபிவிருத்தி இடம்பெறுகிறது: கிழக்கு முதலமைச்சர்

நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் எமக்கு வடக்குத் தலைமைகள் செய்த துரோகங்கள் பற்றி பேசிவருகின்றேன். இதனை கூர்ந்து கவனித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்று எதிரான கருத்துக்களை கூறுகின்றார்கள். அவர்களை நான் பாராட்டுகின்றேன். ஏனெனில் எனது பேச்சசை எப்படியாவது செவிமடுக்கின்றார்கள். இவர்கள் கடந்த கால வரலாறுகளை மீட்டுப்பார்ப்பதற்கான கட்டாய தேவை ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் எனது பேச்சுத்தான்.

தற்போதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ்ர்களின் கடந்த கால வரலாற்றினை கற்பதற்கான அல்லது மீட்டுப்பார்ப்பதற்கான ஓர் சந்தர்ப்பத்தினை நான் ஏற்படுத்தி இருக்கின்றேன் என எண்ணத்தோன்றுகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 06.12.2011 அன்று மட். கருவப்பங்கேணி விபுலாநந்த வித்தியாலயத்தின் முப்பெரும்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில, கிழக்கு மாகாணசபை அமையப்பெறுவதற்கு முன்னர் கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சிலர் குறிப்பிடுகின்றார்கள். நானும் இதனை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இந்த அபிவிருத்தி திட்டங்களை ஏற்படுத்தியவர்கள் யார்? தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களா? என்ற கேள்வியை நான் கேட்கின்றேன். எனவே யாரோ செய்த அபிவிருத்தியை பெருமையாக கொள்ளாது எங்களால் என்ன அபிவிருத்தி நடந்திருக்கின்றது என்பதனை வெளிக்கொணர வேண்டும். அதனை விடுத்து விதண்டாவாதம் செய்யும் இவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையின் தோற்றத்தின் பின்னர் எவ்வாறான அபிவிருத்தி கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதனை. ஏன் தனது சொந்த ஊhரிலே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதனை ஒத்துக் கொண்டிருந்தார்.மாகாண சபையினது தோற்றத்தின் பின்னர் அபிவிருத்தி நடந்திருக்கிறதா அல்லது இல்லையா? ஏன்பதனை மக்கள் தெளிவுபடுத்துவார்கள்.

எனவே தொடர்ந்து கிழக்கு மாகாண மக்களை எங்கோ இருந்து வந்த தலைமைகள் ஏமாற்றுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களில்தான் கிழக்கிற்கான அரசியல் தலைமைத்துவம் அவர்களால் திட்டமிட்டு இல்லாது செய்யப்பட்டது. ஆனால் இன்று அவ்வாறல்ல விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களுக்கான ஓர் தனிக் கட்சி இருக்கிறது.அதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. அதற்கு தலைவராக நான் இருக்கின்றேன் .அதனூடாக எமது மக்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதனை இயன்றவரை செய்ய எங்களுக்கு தெரியும். ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும்போது எமது மாகாணத்தின் வளர்ச்சி எமது மக்களுக்கு தெரியும் அதனை யாரும் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை.

இன்னும் ஒருசிலர் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டைப்பினர் முழுமையாக வடக்குத்லைமைகளின் பொய்யான, எந்தவோரு தீர்வும் அல்லது எந்தவொரு திடட்மில்லாத அவர்களது கதைக்குப் பினனால் எமது மக்களையும் இழுக்கப்பார்க்கிறார்கள். இதற்கு எமது மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். இன்னும் ஓர் சில வருடங்களில் இவர்களது போலி வேசங்கள் வெளியில் வந்துவிடும். ஆப்போது இருந்த இடமறியாது வடக்கு நோக்கி இவர்கள் பயணிப்பார்கள். கடந்த காலங்களில் எமக்கு துரோகமிழைத்த வடக்கு மேலாதிக்க வர்க்கத்தினரின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துச சொல்வதற்கான ஓர் சூழல் இன்று வந்திருக்கின்றது.

உண்மைகளையும் துரோகங்களையும் நிருபிக்க வேண்டுமானானால் துரோகிகளையும் அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதனைக் கருத்திற் கொண்டுதான் நான் தற்போது எமக்கு துரோகம் இழைத்த வடக்கு மேலாதிக் வாதிகளின் சூழ்ச்சிகளை எமது மாகாண மக்களுக்கு விளக்கி வருகின்றேன். அவர்களும் அதனை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தனது உரையிலே குறிப்பிட்டிருந்தார்.

வித்தியாலயத்தின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் கிழக்கு மதாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன், வலயக் கல்வி பணிப்பாளர்களான திருமதி எஸ. பவளகாந்தன், திருமதி ந.புள்ளநாயகம், திருமதி சுபா சக்கரவர்த்தி, க.பாஸ்கரன் மற்றும் பல பிரமுகர்கள் மதப் பெரியார்களும் கலந்து சிறப்பிததார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply