இழப்பு விபரங்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
வடக்கு சண்டைக் களத்தில் இலங்கைப் படையினருக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதில்லை என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தீர்மானத்துள்ளது.
களமுனையில் படையினர் பெற்றுவரும் வெற்றிகளை இது பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக வன்னியில் முன்னெடுக்கப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் தொடர்பான இழப்பு விபரங்களை வெளியிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்று னநகநன்உந.டம (பாதுகாப்பு அமைச்சக இணையத்தள) ஆசியரிய பீடம் தீர்மானித்துள்ளது. அங்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் படை முன்னேற்றம் மற்றும் நடவடிக்கைகளின் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடலாம் என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply