பாம்பன் பாலத்தை முற்றுகையிடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் மிரட்டல்
இலங்கை சிறையில் வாடும் 5 ராமேஸ்வர மீனவர்களை 19ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் பாம்பன் பாலத்தை முற்றுகையிடுவோம் என்று ராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.கடந்த 28.11.2011 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று, யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மீனவர்களையும், படகுகளையும் கொண்டுவருவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர்களுடைய உத்தரவாதத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தில் மீனவர்களும், பாதிக்ப்பட்ட குடும்பத்தினரும் உண்ணாவிரம் மேற்கொள்கின்றனர்.
உண்ணாவிரத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது, மூன்று முறை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தை உறுதியை தரவில்லை. 19ஆம் திகதி விடுதலை ஆவார்கள் என்று மத்திய அரசு சொன்னதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை சிறையில் வாடும் 5 ராமேஸ்வர மீனவர்களை 19ஆம் திகதிக்குள் விடுவிக்காவிட்டால் பாம்பன் பாலத்தை முற்றுகையிடுவோம். மீனவர்கள் விடுதலை ஆகும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 28.11.2011 அன்று மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பவில்லை என்று கூறியுள்ள, பாதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கடலுக்கு சென்று திரும்பினால் ஒரு நாளைக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். இப்போது கடந்த 10 நாட்களாக எந்த வருமானம் இல்லாமல் இருக்கிறோம். 5 குடும்பங்களுக்காக மற்ற மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் இருப்பதால், ஒட்டுமொத்த மீனவர்களும் கஷ்டத்தில் இருக்கிறோம். சாப்பாட்டுக்கு அரிசி வாங்கக் கூட கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply