சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இன நல்லிணக்கத்துக்கு குரல் கொடுப்போம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஒவ்வொருவருடைய எண்ணங்கள் உணர்வுகளினை மற்றவர்களும் மதித்து ஏற்று நடப்பதன் மூலம் இம்மண்ணில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ இந்நாளில் இன நல்லிணக்கத்துக்கு அனைவரும் இணைந்து குரல் கொடுப்போமென சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாம் அடுத்தவர்களின் உரிமைகள் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளமையினால் லட்சக்கணக்கான உயிர்களையும், பல கோடி ரூபா கணக்கான சொத்துக்களையும் அழித்ததுடன் நாட்டின் அபிவிருத்திகளையும் பின்னடையச் செய்துள்ளோம்.

இந்நிலமை மேலும் தொடர அனுமதிக்கக்கூடாது. இன்றும் கூட நாம் மனிதஉரிமைகள் தினத்தின் பெயரால் கொண்டாடுகின்றோமே அன்றி மனிதஉரிமைகளை மதித்து அதனை ஏற்றுக்கொள்ளப் போகின்றோமா என்றால் இல்லையென்றே கூறலாம்.

இன்றும் கூட நாம் ஒருவரை ஒருவர் நம்பாமலும் அடுத்தவர்களின் உணர்வுகளை கருத்துக்களை மதிக்காமலுமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனையிட்டு நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். நாம் சரியான பாதையில் செல்கின்றோமா?அடுத்தவர்களினை ஏற்றுக்கொண்டோமா? ஏமக்கு இருக்கும் உரிமைகள் வசதி வாய்ப்புக்களை அடுத்தவர்களும் அனுபவிக்கப்பயன்படுத்த வழிவிடுகின்றோமா என்பதனையிட்டு.

அப்படி இல்லையென்றால் நாம் அதனை உரியவர்களிற்கு வழங்கி அவர்களும் மனமகிழ்வுடன் உரிமைகள் சுதந்திரங்களுடன் வாழ வழிவிடவேண்டும்.

நாம் அதனை மறுத்து வழிஅமைக்காது போவமாக இருந்தால் மீண்டும் எமது நாடும் மக்களும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்படும் என்பதனையிட்டு சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

உலகநாடுகள் பலவற்றிலும் இன்று அடிப்படை மனிதஉரிமைகளை மதிக்கத்தவறியதன் விளைவாக அரசியல் புரட்சிகளும் மக்கள் கிளர்ச்சிகளும் ஏற்பட்டு அந்நாடுகளும் மக்களும் அழிவிற்கு உள்ளாகிவரும் பரிதாபகரமான நிலமை காணப்படுகின்றது.

இத்தகையதொரு நிலமையினை தாங்கும் வல்லமை எமது நாட்டைப்பொறுத்தவரையில் இல்லை. இதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனைவிடுத்து வீண்கௌரவம்,அகங்காரம் காட்டுவதன் மூலம் நாம் எம்மையும் அழித்து நாட்டையும் குட்டிச்சுவராக்கும் நிலமையினை ஏற்படுத்துவதுடன் என்றும் மாறாத வடுக்களுக்கு எம்மையும் உள்ளாக்கி எம் சந்ததியிரையும் உள்ளாக்கும் நிலமை ஏற்படும்.

ஆகையினால் எதிர்காலத்தில் இந்நாடு வளம்மிக்க சந்தோசமான நாடாகவும் மக்களிடையே வேற்றுமைகள் இன்றி ஒற்றுமையும் சமாதானமும் நிலவும் ஒரு மகிழ்ச்சியான நாடாக இருக்க இன்றைய மனிதஉரிமைகள் தினத்தில் ஒருவரைஒருவர் புரிந்து விட்டுக்கொடுப்புகளுடன் சந்தோஷமாக வாழ இந்நாளில் உறுதிகொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=10_12_2011_007_002&mode=1

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply