46 முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று சமூகத்துடன் இணைப்பு
2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் புனர்வாழ்வு பெற்று வரும் சகல முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் விடுதலை செய்ய முடியும் என சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 700 பேர் வரையில் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேலும் சில மாதங்களுக்கு மு2ன்னெடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை புனர்வாழ்வு பெற்ற 46 விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இன்று சமூகத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply