இராணுவ வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றம்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இனிவரும் காலத்தில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற பதவி நிலைக்குள் உள்ளடங்கமாட்டார் என இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின்போது சரத் பொன்சேகா மேற்கொண்ட நடவடிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாக பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிகளாக

1952 ஆம் ஆண்டில் இருந்த பிரிகேடியர் சின்கிலேயர்,
1955 இல் இருந்த பிரிகேடியர் எப்.எஸ்.ரெய்ட்,
1959 இல் இருந்த மேஜர் ஜெனரல் ஏ.எம் முத்துகுமாரு,
2000 ஆம் ஆண்டில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரசூரிய,
2004 ஆம் ஆண்டில் இருந்த லெப்டினனட் ஜெனரல் லயனல் பலகல்ல,
2005 ஆம் ஆண்டில் இருந்த ஜெனரல் கொட்டேகொட

ஆகியோரின் பெயர்களே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தனியார் ஊடகங்கள் சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத்தளபதி என்று அழைக்கின்றபோதும் அவற்றுக்கு அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவித்தல் எதனையும் விடுக்கப் போவதில்லை என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமது தந்தையின் விடுதலைக்காக அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 25 ஆயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சரத் பொன்சேகாவின் மகள் அபர்ணா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் தி;கதிக்கு முன்னர் இந்த கையொப்பங்கள் அமெரிக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்றும் அபர்ணா குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply