எமது தீர்வு யோசனைகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வுக்கான யோசனைத் திட்டத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்தின் மூன்று அம்சங்கள் தொடர்பில் சர்ச்சை நிலவுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று விடயங்கள் தொடர்பில் சில சர்ச்சைகள் நிலவுவதாக மட்டுமே அரசாங்கம் தெரிவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கை மீள இணைத்தல், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் இந்த சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் கூட அரசாங்கம் எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும், மாறாக வேறு விதமாக காவல்துறை அதிகாரங்களை பகிர்வது குறித்து அரசாங்கம் பரிந்துரை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
காணி அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவதில் சில பிரச்சினைகள் காணப்படுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
யோசனைத் திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply