லலித் குமார் குகன் முருகன் இருவரையும் உடனே விடுதலை செய்க

லலித் குமார், குகன் முருகன் இருவரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் இல்லாவிட்டால் கடத்தப்பட்ட விடயத்தை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் இது குறித்து நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டம் நடாத்த தயாராக இருப்பதாகவும் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கூறினார்.

யாழ்ப்பானத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பான மாவட்ட அமைப்பாளரான லலித்குமார் வீரராஜூ மற்றும் அவருடன் சென்ற குகன் முருகன் ஆகிய இருவரும் கடத்தப்பட்டது தொடர்பாக மக்கள் போராட்ட இயக்கம் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத்தெரிவித்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த மேற்கண்டவாறு கூறினார்.

மக்கள் போராட்ட அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்வதற்காக மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பான அமைப்பாளர் லலித் குமார் வீரரராஜூ மற்றும் குகன் முருகன் ஆகியோர் அவரங்கால் பிரதேசத்தில் உள்ள குகன் முறுகனின் வீட்டிலிருந்து கடந்த 09 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் NP GT 7852 மோட்டார் சைக்கிளில் பயனம் செய்துள்ளனர். பயனித்த நேரத்திலிருந்து இதுவரையும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

லலித்குமார் வீரராஜூ 2010ம் ஆண்டு யாழ்ப்பானத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டிருந்தார்.அதைத் தொர்ந்து 2011 நவம்பர் மாதம் பாதுகாப்பு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு அரை மணித்தியாலம் வரை தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மற்றும் யாழ்ப்பானத்தில்அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அச்சுருத்தப்பட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று கானாமல் போயுள்ளார். இச்சம்பவம் பெரும் பாரதூரமான விடயமாகும். இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் எல்லா இடங்களிளும் எல்லோருக்கும் அரசியல் செய்யும் உரிமையுன்டு. இது விடயத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply