பன்முகத்தன்மையின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் கலாசார அழிவுகளை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை. சகல மதத்தினரையும், இனத்தினதும் கலாசார விழுமியங்களையும், மரபுரிமைகளையும் பாதுகாக்கும் நோக்குடனேயே அரசு செயற்படுகிறது என தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புஷ்பராஜா அவர்களின் தலைமையின் கீழேயே மேற்கொள்ளப்படுகின்றன. சகல இன மக்களும், இந்த நாட்டில் வாழ்கின்றனர். ஒவ்வொரு இனத்துக்கும் அவர்களது மதத்திற்கும் தனித்தனியான மரபுரிமைகள் உள்ளன.

அவர்களுக்கு மதிப்பளிப்பதும் அவற்றை பாதுகாப்பதும் எமது கடமைகளில் ஒன்று. பன்முகத்தன்மைக்கூடாக நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையி லேயே நாம் செயற்படுகிறோம்.

இலங்கை யில் வடக்கில் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்தியாவின் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி அவர்களும் தமிழ் பெளத்தர்கள் பற்றி நடத்திய ஆய்வு நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தரோடை, வடமராட்சி பகுதியில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தொல் பொருள் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த கால யுத்தம் காரணமாக எமக்கு ஆய்வுகள் நடத்த இல்லாமல் போனது. தவிர இன ரீதியாக நாம் பிரித்துப் பார்க்கவில்லை.

யாழ். நகரில் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நாகரிகமான மக்கள் வாழ்ந்துள்ளன ரெவும் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளுக்கு கல்யுக மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் சிதைவடைந்த நிலையில் இன்னமும் இந்துக்களின் மரபுரிமை சின்னமாக பாதுகாக்கப்படுகிறது என்றும் அமைச்சர் ஜகத் பாலசூரிய குறிப்பிட்டார்.

தேசிய மரபுரிமைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply