அமெரிக்க உதவி கோரும் சரத்பொன்சேகாவின் மகள்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதிகளின் பெயர் பட்டியலில் இருந்து சரத் பொன்சேகாவின் பெயர் நீக்கியுள்ள நிலையில், அவரை சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வண்ணம் இருப்பதாகத் தெரிய வருகிறது.

சரத் பொன்சேகா மன்னிப்புக் கேட்டால் விடுதலைச் செய்யப்படலாம் என அரசதரப்பில் தெரிக்கப்பட்டதாகத் தகவல் வெளிவந்த போதும், அவ்வாறான ஒரு மன்னிப்புக் கோரலை சரத் பொன்சேகா விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது மூத்த மகளான அப்ஸரா பொன்சேகா, அமெரிக்க அரசின் உதவியை நாடியுள்ளதாகவும், இதன்படி அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அதற்கான கோரிக்கை மணுவை சமர்பித்து, அந்த இணைய மனுவில் 25,000 பேர்களது கையெழுத்துகள் சேர்க்கப்பட்டால், அமெரிக்க அரசு இந்த விவகாரத்தைக் கவனத்திற் கொள்ளும் என்றும், உறுதியளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இதற்கமைவாகத் தற்போது, சரத் பொன்சேகாவை விடுப்பதற்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலம், 25,000 கையெழுத்துகள் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த முயற்சி வெற்றி பெறும் எனவும், அப்ஸரா நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அறியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply