அரசுக்கு முட்டுக் கொடுப்பதையும் கிழக்கு பிரிவினையையும் கைவிடுக

தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும், கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுத் திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்னம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் தமிழ் தேசம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமுகமாக சர்வதேசம் தலையிடுவது தொடர்பாகவும் தலையிடாமல் இருக்கவேண்டுமாயின் இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசாட்சி செய்துகொண்டு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என சொல்வதும் திம்பு பேச்சுவார்த்தைபோல் என்று கூறுவதையும் நிறுத்திவிட்டு 89ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டதும் தமிழ் கட்சிகளால் முன்வைக்கப்பட்டதும் தற்சமயம் வடகிழக்கு இணைப்பு,காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும்.அத்தோடு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அந்த மக்களோடு பேசி தீர்வுகாணவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்ததாலேயே தமிழ் மக்களிடையே தனிநாட்டுச்சிந்தனை பிறந்தது.

இந்தப்பின்புலத்தில் இதற்காக நாம்கொடுத்த விலைகள் எண்ணற்றவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உரிமைகள் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் தமது இனத்தின் உரிமையை பெறுவதற்காக ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் பங்காற்றி உள்ளனர்.

குறிப்பாக இப்போராட்டத்திற்கு போராளிகள் தொடக்கம் பொருளாதாரம்;, வரையும் ஜனநாயகரீதியாக இப்போராட்டத்தை வளர்த்துச்செல்ல ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை வழங்கி உள்ளனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது அதனை மறுப்பதற்கும் எவருக்கும் உரிமையில்லை.

எமது நாட்டில் மூன்று தசாப்தமாக நீடித்த போரும் ,உட்பூசல்களும்,முரண்பாடுகளும் விரும்பியோவிரும்பாமலோ இலங்கைதீவின் அனைத்து இனமக்களையும் பெரும்துயரத்தில் ஆழ்த்தியது இதனை எந்த இதயசுத்தியுள்ள மனிதர்களும் மறுதலிக்கமுடியாது.

இந்தவகையில் இன்று எமது நாட்டில் ஒரேநாடு, ஒரேதேசம் எல்லோரும் ஒரேதாய்மக்கள் என்ற கோட்பாட்டை முன்னிலைபடுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது சிந்தனையை உணர்வு பர்வமாகவும் இதயசுத்தியோடும் நடைமுறைப்படுத்துவதற்கு இதைவிட வரலாற்றில் பிரிதொருசந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.

எனவே உலக நாடுகளின் தலையீட்டை தவிர்ப்பதற்கும், சர்வதேசநெருக்கடிநிலையில் இருந்து தான் எதிர்நோக்கி உள்ள சவால்களை அகற்றவும் ,உலகத்தமிழர்களின் இன்றைய இலங்கை அரசுதொடர்பான சந்தேகப்பார்வையை இல்லாது செய்யவும் உண்மையில் தனது சிந்தனையை நிலைநிறுத்தி தனது ஆட்சிஅதிகாரத்தை ஸ்திரப்படுத்தவும் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய நிரந்தரத்தீர்வை வழங்கி எல்லோரையும் ஒரேகுடையின் கீழ் அரவணைத்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும்,கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

நீண்ட துயரவடுக்களை சுமந்து நிற்கும் எமது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் எமது பிரதேசமான வடகிழக்கை சொர்க்க பூமியாக மாற்றவும் மிகக்குறைந்த இந்த தீர்வுத்திட்டத்தை முன்மொழிய ஓரணி திரளவேண்டும்.

இந்த குறைந்த தீர்வுத்திட்டத்தைக்கூட இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தவறுமேயானால் தமக்கான தீர்வுத்திட்டதை பெற சர்வதேசத்தை நாடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லையென்பதையும் ஆட்சியாளர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply