கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல்
கால நிலை மாற்றம் தொடர்பான கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகிக் கொண்டுள்ளது. “கனடா தொடர்ந்தும் கியோட்டோ ஒப்பந்த த்தின்படி செயற்படாது” என அந்நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சர் பீட்டர் கென்ட் தெரிவித்துள்ளார்.
இதன்படி கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் முதலாவது நாடாக கனடா பதிவானது. கியோட்டோ ஒப்பந்தம் 1997 ஆம் ஆண்டு உலக வெப்பமடைவதற்கு எதிராக ஜப்பானின் கியோட்டோ நகரில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும்.
கியோட்டே ஒப்பந்தத்தின்படி செயற்பட கனடா தொடர்ந்து தவறிவரும் நிலையில் அதற்காக அதிகப்படியான தண்டப் பணத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. கியோட்டோ ஒப்பந்தத்தின் கீழ் கனடா 13.6 பில்லியன் டொலர் அளவில் தண்டம் செலுத்தியுள்ளது. இதனால் கனடாவின் ஒவ்வொரு குடும்பமும் தலா 1,600 டொலர் அளவில் செலவு செய்துள்ளது. இந்நிலையில் உலகில் அதிக சூழல் மாசடையும் செயலில் ஈடுபடும் சீனா, அமெரிக்கா ஆகியன இந்த ஒப்பந்தத்தின் படி செயற்படவில்லை எனவும் கனடா சுற்றாடல்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply