பேச்சுவார்த்தையில் காணி அதிகாரம் குறித்து இன்று விரிவாக ஆராய்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (14) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய சந்திப்பில் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு காணி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் மாத்திரம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
காணி அதிகாரம் குறித்த முழுமையான பேச்சுவார்த்தை இன்று நிறைவு பெறாத நிலையில் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply