தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது: ஜீ. எல். பீரிஸ்
எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும். அதனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய ரீதியிலான ஆணைக்குழுவை நிராகரித்து சர்வதேச ஆணைக்குழுவை எதிர்பார்க்கும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் எண்ணம் ஈடேறாது எனத் தெரிவித்த அமைச்சர் சம்பந்தன் போன்றோர் நல்லெண்ணத்தை வளர்க்கும் விதத்தில் கூற்றுக்களை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. 54 நாடுகள் எமக்கு ஆதரவாகவே உள்ளன. சகல சவால்களையும் வெற்றி கொள்ள அரசாங்கத்திற்கு முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெளி விவகார அமைச்சின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்; தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம். பி.க்கள் சம்பந்தன், ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானதென்றும் நிராகரிக்கப்பட்டதென்றும் கூறுகின்றனர்.
எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாக வும் எமது மக்களின் தேவைகளைப் பெற் றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டுமென்பதை நான் அவர்களுக்குக் கூறவிரும்புகிறேன். சம்பந்தன் எம்.பி. அறிவுபூர்வமாக அன்றி உணர்வுபூர்வமாகப் பேசுகிறார். பிரச்சினைக்குத் தீர்வு காண அறிவு பூர்வமாகப் பேச்சு நடத்தித் தீர்வுகளைப் பெறலாம் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
கடந்த முறை ஐ. நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பெரும் நெருக்கடிகள் கிளப்பப்படும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். ஒரே ஒரு நாடு மட்டுமே எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது.
அச்சமயம் எம் ஜனாதிபதி அவர்களுடன் நான் நியூயோர்க்கில் இருந்தேன். அங்கிருந்து கொண்டு சுமார் 15 நாடுகளின் அமைச்சர்களுடன் எம்மால் கலந்துரையாட முடிந்தது.
இதன் பிரதிபலனைவிட எதிராக அறிக்கை சமர்ப்பித்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரே தமது அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொண்டார். இது செப்டம்பரில் நடந்தது. பின்னர் ஒக்டோபரில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது அந்நாட்டின் ஊடகங்கள் இலங்கையை விமர்சித்து பாரிய பிரசாரங்களை மேற்கொண்டன.
பொது நலவாய நாடுகளின் மாநாட்டை 2013ல் இலங்கைக்கு வழங்கப் போவதில்லை எனவும் இலங்கைக்கெதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் பத்திரிகைகள் பிரசுரித்தன.
இதன்போது நாம் பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் எம் பிரயத்தனத்தை வெற்றியடையச் செய்தன. பெரும்பாலான நாடுகளின் ஆதரவு, எமக்குக் கிடைத்த போதும் ஒரே ஒரு நாடு எமக்கெதிராக செயற்பட்டது. அதற்கெதிராக நாம் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். இதன் போதும் மேலும் பதினைந்து நாடுகள் எமது நியாயத்தை, ஏற்றுக்கொண்டு எமக்கு ஆதரவளிக்க முன்வந்தன. ஏகமனதாக அந்த நாடுகள் ஏற்றுக்கொண்டன. அந்த மாநாட்டின் முடிவில் 2013ம் ஆண்டு மாநாடு எமது நாட்டுக்கு வழங்கப்பட்டது. இது எமது பிரயத்தனத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
எமது வெளிநாட்டுக் கொள்கை தவறானதோ அல்லது நிராகரிப்புக்குள்ளானதோ அல்ல என்பதை எடுத்துக் காட்ட இதனை சிறந்த ஆதாரமாகக் கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் என்றவகையில் விமர்சனங்கள் பல இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு இறைமை விடயத்தில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். யுத்த கால சம்பவங்களை ஆராய தேசிய ரீதியிலான விசாரணைகளை நிராகரித்துவிட்டு சர்வதேச விசாரணைகளைக் கோருக்கிறார் சம்பந்தன் எம். பி. இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது.
லூயிஸ் ஹாபரின் கருத்துக்களை ஆதரிக்கும் அவர் ஆர். பி. கு. விடயத்தையும் ஆதரிக்கிறார். இது எமது நாட்டிற்குள் எந்த சர்வதேச சங்கமும் பிரவேசிக்கலாம் என்பதையே கொண்டுள்ளது. சர்வதேச தலையீட்டை அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை என்பதை நான் அவருக்குக் கூற விரும்புகிறேன்.
தருஸ்மன் அறிக்கையானது யாரிடம் காட்சிகளைப் பெற்று தயாரிக்கப்பட்டது என்பது எவருக்குமே தெரியாது. அந்த நிலையில் அதன் உண்மைத் தன்மை என்னவாக இருக்க முடியும்? அது சில அரசியல் இலாபங்களுக்காக மேற் மேற்கொள்ளப்பட்ட விடயம் என்பதை நாம் உலகிற்கு எடுத்துக் கூறி வருகின்றோம்.
பொது நலவாய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை நியமிப்பது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச பொலிசிடம் எமது பிரச்சினைகளை பாரம்கொடுக்க நாம் தயாரில்லை.
சில கொள்கைகள் எமது நாட்டுக்குப் பொருத்தமானதல்ல என்பதை ரணில் விக்கிரமசிங்க உணர வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply