முகமாலை, இத்தாவில் கிராமங்களில் மீளக் குடியமர அனுமதியுங்கள்

முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தம்மைத் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுக்குவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த மகஜரின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர், வடமாகாண ஆளுநர், அரச அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

பளை, பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடு கேணி அதனை அண்மித்த பகுதியைச் சேர்ந்த மக்களாகிய நாம் அனைவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் போர் காரணமாக வன்னிக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்தோம்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடம் பூர்த்தியாகியுள்ள போதும் நாம் சொந்த இடம் திரும்ப முடியாது பெரும் பொருளாதார, வாழ்விட நெருக்கடிகளுடன் உறவினர், நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றோம்.

போர் முடிவுற்ற நிலையில் எமது நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்கி றது. இந்த நிலையில் நாம் தற்போதும் அகதி வாழ்வே வாழ்கின்றோம். எம் அனைவ ருக்கும் எமது ஊர்களில் சொந்தக் காணிகள், வீடுகள் என்பன இருந்தன. அவை யாவும் போரின் கோரத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

எமது மாவட்டத்தில் அனேக கிராமங்களில் துரிதகதியில் அபிவிருத்திப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ஆனாலும் எமது கிராமங்கள் சிதைவடைந்த நிலையில் போரின் வடுக்களைச் சுமந்தபடி இப்போதும் சூனியப் பகுதியாகக் காணப்படுகின்றன. இந்தநிலையில் இருந்து எமது கிராமங்களை விடுவித்து அபிவிருத்தி செய்து இலங்கைத் தீவின் ஓர் வளம் மிக்க கிராமங்களாக மாற்றி அமைக்க நாம் அனைவரும் தயாராக உள்ளோம். இந்த நிலையில் எமது கிராமங்களில் நாம் கால் பதித்து அபிவிருத்தி செய்ய போரின் போது புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள்தான் தடையாகக் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் வீதி திருத்தப் பணிகளுக்காகப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடியகற்றும் பணி உடன் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடரப்படாது காணப்படு கின்றது. எனவே எம் அனைவரினதும் உண்மையான உணர்வினைப் புரிந்து எமது கிராமங்களில் நாம் அனைவரும் விரைவாக மீள்குடியமர்ந்து கிராமங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருமாறு தயவாக வேண்டுகின்றோம்.

இதன் ஆரம்பகட்டமாக எமது கிராமங்களில் உள்ள இந்து, கிறிஸ்தவ ஆலங்களைச் சென்று பார்வையிடவும், அதனை வழிப்படுத்துவதற்கும் ஆவன செய்துதவுமாறு தயவாக வேண்டுகின்றோம். அத்துடன் தடைப் பட்டுக் காணப்படும் கண்ணி வெடியகற்றும் பணி விரைவாக ஆரம்பிக்கவும் ஆவன செய்துதவுமாறு தயவாக வேண்டுகின்றோம்.

நிறுத்தப்பட்டுள்ள இடம் பெயர்ந்தோருக்கான வழங்கப்பட்டு வந்த உலர்உணவு நிவார ணத்தை தற்போது பாரிய உணவுப் பொருளாதார நெருக்கடியில் வாழும் எம் அனை வருக்கும் மீள்குடியேற்றம் வரையாவது கிடைக்க ஆவன செய்துதவுமாறும் தயவாக வேண்டு கின்றோம். என்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply