வடக்கு கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு முக்கியமானது
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை மீண்டும் இணைக்கும் போது முஸ்லிம்களின் பங்கு மிக முக்கியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் பேச்சுவாத்தை இடம்பெற்றுள்ளது.
இதன் போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சு நடவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைபபிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பாக இச்சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, காணி, பொலிஸ் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தாக பிரதி மேயர் குறிப்பிட்டார்.
இரு சமூகங்களையும் பாதிக்காதவாறு இரு கட்சியினரும் எந்தவொரு அறிக்கையினை ஊடகங்களுக்கு விடுவதில்லை எனவும் இதன்போது தீர்மானிக்கட்டதாக நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் தொடாந்து பேச்சுக்களை மேற்கொள்வதற்காக இரு கட்சிகளிலிருந்தும் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவூப் ஹக்கீம், ஹசன் அலி, பைசால் காசீம், எம்.பி.பாரூக் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன், பொன்.செல்வராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply