மீள்குடியேற்றத்தில் ரிஷாத் பதியுதீன் தலையீடு நிறுத்தப்படவேண்டும்
மீள்குடியேற்ற நடிவடிக்கைகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் அதனை தாம் கண்டிப்பதுடன் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் மீள்குடியேறிய மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரச அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் அவர்களுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இச் செயல்களின் பின்னணியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சுக்கு சொந்தமான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையிடுதல் அதிகரித்துள்ளது. அத் தலையீட்டை தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடன் தடுத்து நிறுத்துமாறும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply