முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தமிழரின் ஓர் அங்குலக் காணியேனும் எடுக்கப்படமாட்டாது: ரிசாத் பதியுதீன்
முஸ்லிம்களை மீள்குடியேற்றும்போது தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஓர் அங்குலத்தையேனும் எடுப்பதற்கு துணைபோகமாட்டேன் என்று தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் குரோதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீள்குடியேற்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் ரிசாட் இங்கு மேலும் கூறுகையில்,
மன்னார் சன்னார் பகுதி மற்றும் வவுனியா சௌபால புளியங்குளம் போன்ற கிராமங்களில் ஏற்கெனவே வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தான் நாம் கேட்கின்றோம். எனினும் அங்கிருந்த தமிழ் மக்களை வெளியேற்றுமாறு நான் ஒரு போதும் கூறியதில்லை.
தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது. முஸ்லிம்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுவதால் எந்தத் தீர்வையும் எட்டி விட முடியாது.
மேலும் முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அங்கு தமிழருக்குச் சொந்தமான ஓர் அங்குல நிலத்தையேனும் எடுப்பதற்கு நான் துணை போகமாட்டேன். பிரச்சினைகள் இருப்பின் அது பேசித் தீர்க்கப்பட வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply