ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னுக்கு பின் முரண்பாடுகள்
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இறுதி அறிக்கையில் காணப்படும் சில விடயங்கள் முன்னுக்கு பின் முரணானவை என குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் உட்கிடக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என்ற அறிக்கையின் தகவல்கள் முரணானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு ஆணை வழங்கப்படவில்லை. எனினும், இதுதொடர்பாக எந்த விசாரணைகளையும் நடத்தாமல் ஆணைக்குழு இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 70000 பொதுமக்களே யுத்த வலயத்தில் இருந்ததாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், யுத்த வலயத்தில் 400000 பொதுமக்கள் இருந்ததாக உத்தியோகபூர்வ புள்ளி விபரத்தரவுகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply