ஐ.தே.கட்சியின் தலைவராக மீண்டும் ரணில்
தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 66 வாக்குகளையும் கரு ஜயசூரிய 26 வாக்குகளையும் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தலைமைப் பதவி உட்பட ஏனைய பிரதான பதவிகளுக்கான வாக்கெடுப்பு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு தயா கமகேயும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதித் தலைவர் பதவிக்கான போட்டியில் ரவி கருணாநாயக்கா மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் போட்டியிட்ட நிலையில் 8 வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாஸ பிரதித் தலைவராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐதேக தேசிய அமைப்பாளர் பதவிக்கு போட்டியிட்ட தயா கமகே 56 வாக்குகளையும் தயாசிறி ஜயசேகர 40 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply