தருஸ்மன் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மையுடையது: ஜீ. எல். பீரிஸ்

தருஸ்மன் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மையுடையதாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

யுத்த சூனியப் பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இருந்தது. புலிகள் இந்த பிரதேசத்தை சரிவர பயன்படுத்தவில்லை புலிகள் பொது மக்கள் மீது ஆட்டிலறி தாக்குதல் நடத்தினர். வேறு யுத்த சூனிய பகுதிகள் உருவாக்கப்பட்டபோதும் புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனை நல்லிணக்க ஆணைக்குழு தெளிவாகக் கூறுகிறது. தருஸ்மன் அறிக்கை தவறானதாகும் தவறான வழிகாட்டலின் கீழே தருஸ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் புலிகள் ஆயுதங்களை மறைத்து வைத்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தவர்களை தெளிவாக அடையாளங் காண முடியும். ஆனால் தருஸ்மன் அறிக்கையில் யாரையும் விசாரிக்காது தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவில் பொறிமுறை உள்ளது. ஆனால் பொறுப்பற்ற விதத்தில் தருஸ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை நம்பகத்தன்மையுடையது.

ஜனநாயக நீரோட்டத்தில் உருவான அரசாங்கத்தை களங்கப்படுத்த சில தரப் பினர் முயல்வதை சர்வதேச சமூகம் உணரவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply