வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இராணுவக் குவிப்பு

இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கில் குற்றசெயல்களும் பதற்றங்களும் அதிகரித்து விட்டன என்பதுடன் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான எம். சுமந்திரன் தெரிவித்தார்.

வீட்டுக்குள் இராணுவத்தினர் வந்துவிட்டனர். இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான செயலாகும். ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்க வேண்டும். எனினும் ஜனநாயகத்தை சவப்பெட்டியில் அடைத்து விட்டீர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு 230 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றே நினைக்கின்றேன்.

ஒருவர் பாதிக்கப்படும்போது எல்லோரும் பாதிக்கப்படுவர் என்று அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா கூறியிருக்கின்றார். அவரின் கூற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உணவு, உடை, உறையுள், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற தன்மான விடயங்கள் மறுக்கப்பட்டள்ளன. வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் தமிழ், முஸ்லிம்களின் வரப்பிசாதங்கள் விடுதலை போன்றவற்றை பறிக்க முடியாது. எனினும் வடக்கு மக்களின் விடுதலை தென்பகுதி மக்களினால் பாதிக்கப்பட்டு விட்டது.

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தும் தென்பகுதி மக்களுக்கு சார்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

தெற்கில் காணாமல் போன இளைஞர்கள் பற்றியும் ஐ.நா. வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயஙகரவாத தடைச்சட்டம் சிங்கள மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 99 வீதமானோர் பிணையில் செல்லவும் அனுமதியளிக்கப்படவில்லை.

பறிமுதல் சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் வடக்கில் சாதாரண வீடுகள் அழிக்கப்பட்டு மக்கள் நடுத்தெருவுக்கு இழுத்து வீசப்பட்டுள்ளனர். ஆயிரம் ஆயிரம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தெற்கிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது.

மாதகல், முள்ளிக்குளம் உள்ளிட்ட இடங்களில் வாழும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் அப்பகுதிகளுக்கு சுற்றுலாத்துறையினர் அனுமதிக்கப்படுகின்றனர். சிங்கள ஊடகங்களும் பயந்தே இருக்கின்றது.

அளவெட்டியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி. க்கள்மீதான தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க மாட்டீர்கள் மனித உரிமை தினத்தன்று ஜே.வி.பி. யின் உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கீழிக்கும் வகையில் இராணுவத்தினர் விற்பனையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது இராணுவ மயமாகும். மக்கள் இராணுவத்துடன் போட்டியிட முடியாது. அங்குள்ள மக்களின் சமூக பொருளாதார உளிட்ட விவகாரங்கள் சீரழிக்கப்படுகின்றன.

பொருளாதாரம் சீரழிப்பது தொடர்பில் எடுத்துரைப்பதற்கு தூதுவர் தேவையில்லை. வடக்கில் சிவில் நிர்வாகம் எப்போதோ இறந்துவிட்டது. யுத்தம் நிறைடைந்து இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சாரல்கள் இன்றும் தொடருகின்றன.

ஜனநாயகத்தை சவப்பெட்டியில் அடைத்து விட்டீர்கள். ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வீட்டுக்குள்ளேயே இராணுவத்தினர் வந்துவிட்டனர். இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான செயலாகும்.

ஜனநாக ரீதியில் தெரிவு செய்யப்பட்டோருடன் முறையாக கலந்துரையாடி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அமைச்சரவையில் இருக்கின்ற குற்றவாளி அமைச்சரவையினால் இதனை ஏற்படுத்த முடியாது.

காணாமல் போன உறவினர்களை தேடிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். நாட்டை ஒரு முகப்படுத்த வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். சிங்கள முஸ்லிம் மக்களுடன் வாழ விரும்புகின்றோம். இரண்டாம் தர பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம் என்றார். ___

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply