ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு 6மாத சேவை நீடிப்பு
வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியாலைகள், மத்திய மருந்தகங்களில் ஓய்வு பெற்ற வைத்தியர்களை கடமைக்கு அமர்ந்துவதற்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இணக்கம் தெவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் சந்திரசிறியை ரெலோவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் சிறிரெலோவின் தலைவர் ப. உதயராசாவும் நேற்று சந்தித்து பேச்வார்த்தை நடத்தினர். வவுனியாவிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்றுக்காலை இடம் பெற்றது.
இதன் போது ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு சேவைக் கால நீடிப்பு வழங்குவதற்கு ஆளுநர் இணங்கியுள்ளார். வடபகுதியில் சேவையிலிருந்த 60 வயதுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் ஆளுநனால் இடை நிறுத்தம் செயப்பட்டுள்ளனர். இதனால் 25 வைத்தியாலைகள் வரையில் மூடப்படும் நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்விடயம் குறித்து சிவாஜிலிங்கமும் உதயராசாவும் ஆளுநரிடம் நேற்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டினர். வட மாகாணத்தில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் 60வயதுக்கு மேற்பட்ட வைத்தியர்களுக்கு சேவை நீடிப்பினை வழங்க வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்காவது சேவை நீடிப்பை வழங்கி வைத்தியாலைகளை இயக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் வைத்தியர்களை இப்பகுதி வைத்தியாலைகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இருவரும் ஆளுநடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட வைத்தியர்களுக்கு 6 மாதம் சேவைக்கால நீடிப்பு வழங்குவதற்கு தான் இணங்குவதாகவும், ஆனால் இதற்கான மேல்மட்ட உத்தரவு கிடைக்கப்பெற வேண்டு மென்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=20_12_2011_002_003&mode=1
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply