அமெரிக்கா இந்தியா ஜப்பான் முத்தரப்பு பேச்சு
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை முதன் முதலாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. இப்பேச்சுவார்த்தை குறித்து சீனா மிக கவனமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிய பசிபிக் மற்றும் உலகளவிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை டிசம்பர் 16ல் வாஷிங்டனில் நடந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,”ஆசிய பசிபிக் மற்றும் உலகளவிலான பல நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று அரசுகளுக்கிடையிலான தொடர் ஆலோசனைகளின் துவக்கமாக இப்பேச்சு இருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில், அமெரிக்காவுக்கான வெளியுறவு இணைச் செயலர் ஜாவேத் அஷ்ரப், கிழக்கு ஆசியாவுக்கான வெளியுறவு இணைச் செயலர் கவுதம் பம்பாவாலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply