தமிழ் இளையோரை பொலிஸில் கட்டுப்பாடின்றி சேர்க்க அரசு தீர்மானம்

அதிகாரப் பரவலாக்கலின் கீழ் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற போதிலும் தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி பொலிஸ் படையிலும், இராணுவத்திலும் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏற்கனவே சுமார் 750 தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் இராணுவத்திலும் சேர்ந்துள்ளார்கள்.

எல்.ரி.ரி.ஈ. அதிகாரத்தில் இருந்த காலத்தில் இந்த உரிமையை தமிழ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் கொடுக்காமல் தங்கள் படையில் சேர்த்துத் துன்புறுத்தி வந்தார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும், எல்.ரீ.ரீ.ஈ.யின் ஆதரவாளர்களும் நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தாமல் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் காணி அதிகாரங்களையும், பொலிஸ் அதிகாரங்களையும் அதிகாரப்பரவலாக்கலின் கீழ் கொடுக்க வேண்டுமென்று இப்போது புதிய அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தி வருகிறார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “அவ்விதம் பொலிஸ் அதிகாரத்தை அதிகாரபரவலாக்கலின் கீழ் கொடுத்தால் எனக்கு என்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாது போயிருக்கும். நான் கொழும்பிலேயே நிரந்தரமாக வாழ வேண்டியிருக்கும்” என்று சொன்னார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் கூட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதை விரும்பவில்லை. இதனால் நாட்டின் ஏனையபகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிப்பிற்குள்ளாகும் என்று ஆட்சேபம் தெரிவித்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply