ஃபுகுஷிமா அணு உலையை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவைப்படும்

ஃபுகுஷிமா அணு உலையை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவைப்படும் என்று ஜப்பான் அமைச்சர் கோஷி ஹோசனே தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய் இன்னும் 40 ஆண்டுகளும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் கோஷி ஹோசனே கூறுகையில், இந்த அணு உலையில் சிக்கியுள்ள கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

உலையிலிருந்து எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்கும்.அதைச் செய்வதற்கும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும்.

ஃபுகுஷிமா அணு உலையால் ஏற்பட்ட கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது. ரூ.78,400 கோடி என்பது எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான்.பிற செலவுகளும் காத்திருக்கின்றன என அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply