இலங்கையின் பொருளாதாரம் மூன்றாவது காலாண்டில் 8.4 வீத வளர்ச்சி
2011ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8.4 வீதம் வளர்ச்சியை காண்பித்துள்ளது, இரண்டாம் காலாண்டில் இந்த பெறுமதி 8.2 வீதமாக காணப்பட்டது என புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக காணப்பட்டது. முழு வருடத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 8 வீதத்தை சற்று அதிகமாக காணப்படுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
விவசாயத்துறை 6.2 வீதத்தினாலும், தொழிற்சாலைகள் துறை 10.8 வீதத்தினாலும், வளர்ச்சியடைந்துள்ளதுடன், சேவைகள் துறை கடந்த ஆண்டை விட 0.2 வீதம் குறைவடைந்து 7.8 வீத வளர்ச்சியை காண்பித்துள்ளது.
விவசாயத்துறையை பொறுத்தமட்டில் ஏற்றுமதிப் பயிர்களான தேயிலை 6.9 வீதமும், இறப்பர் 2.2 வீதமும், தெங்கு 5.1 வீதமும், நெல் 12.4 வீதமும், வளர்ச்சியடைந்துள்ளன. மீன்பிடித்துறை 17.3 வீத வளர்ச்சியை காண்பித்துள்ளது.
தொழிற்சாலைகள் துறையில் ஆடைக்கைத்தொழில் 10.2 வீத வளர்ச்சியை காண்பித்துள்ளதுடன், பெற்றோலியம் மற்றும் இரசாயனவியல் 8.1 வீதம், மின்சாரம் 7 வீதம், கட்டடநிர்மாணம் 17.3 வீத வளர்ச்சியையும் காண்பித்துள்ளது.
சேவைகள் துறையில், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டுவரன்ட் 27.2 வீத வளர்ச்சியும், மொத்த மற்றும் சில்லறை வியாபார துறை 9.5 வீதமும், தொலைத்தொடர்பாடல் 8.4 வீதமும், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து 1.3 வீதமும், வங்கி மற்றும் நிதியியல் 7.4 வீத வளர்ச்சியும் காணப்பித்துள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply