வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அடைக்கலநாதன் பார்வையிட்டார்
நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வரும் பருவ மழையினால் தலைமன்னாரில் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ- தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தலை மன்னார் பியர் கிராம மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அம்மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கிராமங்களில் உள்ள பல வீடுகளினுள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதுடன் முக்கிய ஆவணங்கள்,மின்சாதனப்பொருட்கள் என்பன வெள்ள நீரில் சிக்கியுள்ளதாக அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் நூற்றுக்கணக்காண குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் முதலில் வெள்ள நீரை உடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன், கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலர் நேரில் வந்து தம்மை பார்வையிடவில்லை எனவும் குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply