காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்தும் அரசு பேச முன்வரவேண்டும்
மூன்று தசாப்தகாலமாக பெரும் அழிவுகளையும் இன்னல்களையும் சந்தித்த தமிழ் மக்கள் இன்று யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்வொன்றினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சிறிரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் காணி பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேசப்பட்டு அவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து அதனை வழங்கவே மாட்டோம் எனக் கூறுவது பேச்சுக்களை முறியடிப்பதற்கே உதவும். எனவே கூட்டமைப்பினருடனான பேச்சுக்களை அரசாங்கம் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் இடம் பெற்றுவருகின்றபோதிலும் அவை உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருப்பதாக தெயவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்வார்த்தையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கும் நிலை காணப்படுகின்றது.
இத்தகைய போக்கானது பேச்சுவார்த்தையினை முறிப்பதற்கே உதவும். எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினை காணும்வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி பொலிஸ் அதிகாரங்கள் குறித்து குறிப்பிடப் பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண் டும். இதனைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே அதிகாரங்களை வழங்க முடியாது எனக் கூறுவது கூட்டமைப்பை பேச்வார்த்தையிலிருந்து வெளியேறுமாறு தெவிக்கும் சமிக்ஞையாகவே அமையும். மூன்று தாப்த காலமாக உயிர் உடைமைகளை இழந்து சொல்லொணா துயரங்களை அனுபவித்த தமிழ் மக்களுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமையும் கூடவாகும்.
எனவே கூட்டமைப்புடன் நட்புறவுடன் பேசி தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தீர்வுக்கு அரசாங்கம் இணங்க வேண்டும்.
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=24_12_2011_001_007&mode=1
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=24_12_2011_014_009&mode=1
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply