சண்டைகள் அதிகாரத்திற்காகத்தான் பிடிக்கப்படுகின்றன

அதிகாரப் போட்டிகளில் ஈடுபடுவோரே அதிகம் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அதிகாரத்திற்காகத்தான் சண்டை பிடிக்கின்றார்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்குப்பழக்கப்பட்டு அதில் விருப்புடையவர்களாக காணப்படுகின்றனர் என உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவயோகன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் வன்முறை ஒழிப்புவாரத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகமும் பால்நிலை வன்முறைக்கெதிரான நிறுவனமும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளருக்கான கருத்தரங்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதனால் ஏற்படும் உளசமூக பிரச்சனைகளும் என்னும் தொனிப்பொருளில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மெதுமெதுவாக தமது தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இது அவர்களுடைய ஆளுமையைக் குறைப்பதுடன் அவர்களை நிரந்தர மனநோயாளிகளாகவும் மாற்றுகின்றது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றில் 60 வீதமான பெண்கள் வீட்டு வன்முறைகளின் போது கணவன் மனைவி இருவருமே பாதிக்கப்படுவதுடன் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஆண்களில் தங்கி இருக்கின்ற பெண்களே இவ்வாறான வீட்டு வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட உளநல மருத்துவ நிபுணர் இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தன்னம்பிக்கையை இழப்பதால் ஆளுமை வளர்ச்சி குறைவதால் நிரந்தர நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.

அத்துடன் ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்கும் நபரின் நோக்கம் அவரின் இயல்பான ஆளுமையைக்குறைப்பதாகும். வன்முறைகள் உடல் உள ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சியைக் குறைக்கின்றது. இப்படியான சம்பவங்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

அதிகாரப் போட்டிகளில் ஈடுபடுவோரே அதிகம் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அதிகாரத்திற்காகத்தான் சண்டை பிடிக்கின்றார்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்குப்பழக்கப்பட்டு அதில் விருப்புடையவர்களாக காணப்படுகின்றனர்.

வன்முறையின் மூலம் இருசாராரும் உளநெருக்கீட்டுக்கு உட்படுகின்றனர். வீட்டு வன்முறைகளின் போது வளரும் பிள்ளைகள் அவற்றைப் பார்வையிட்டு எதிர்காலத்தில் மிகவும் மோசமான வன்முறையாளனாக உருவெடுக்கும் அபாயம் காணப்படுகின்றது.

தற்போது மற்றவர்களுடைய உரிமைகள், நலன்கள் தொடர்பில் அக்கறை இல்லாத ஒரு சமூகம்
உருவாகிக்கொண்டு வருகின்றது. இந்நிலை மாறி சமூகம் விழிப்படைய வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply