இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்தியா, இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காண்பதற்கு உதவவேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் தீர்வினைக் காண்பதே இன்றைய நிலையில் அவசரமானதும் அவசியமானதுமான தேவையாக உள்ளது என்று சிறி ரெலோவின் தலைவர் ப. உதயராசா தெவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் இந்தியா இந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை என்பவை குறித்தும் உரிய வகையில் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந்தியாவின் இத்தகைய அறிக்கை வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 3 தாப்தகாலமாக யுத்தத்தினால் பெரும் கஷ்டதுன்பங்களை பட்ட தமிழ் மக்கள் தற்போது தீர்வொன்றினை நாடியுள்ளனர். இந்தத் தீர்வுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தின் அடிப்படைக் காரணிகளுக்கான பரிகாரமாக அரசியல் தீர்வு இன்றியமையாததாகும். எ
நீடித்த சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசியல் வழிமுறையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் முன்னிற்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா தலையிட்டு தீர்வினைக் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டால் அதனை தமிழ் மக்கள் வரவேற்பார்கள். எனவே பூரண ஒத்துழைப்பினை வழங்கி தீர்வுக்கான முயற்சியில் இந்தியா ஈடுபடவேண்டும்.
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=27_12_2011_001_003&mode=1
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=27_12_2011_010_009&mode=1
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply