இந்தியாவின் கருத்து தீர்வுக்கு ஊக்கமளிக்கிறது; சம்பந்தன் தெளிவான முறையிலே தமது நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதை வரவேற்கின்றோம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர் பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்து இப் பிரச்சினை தீர்வில் எமக்கு ஊக்கம் அளிக்கின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது,
இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா அளித்த ஒத்துழைப்பு எமக்கு நன்றாக தெரியும். இந்த ஒத்து ழைப்பிற்கு பல பிண்ணனி காரணங்கள் உள்ளன என்பதும் எமக்கு நன்றாக புரிகின்றது.
ஆனால் யுத்தத்திற்கு பின்பு இனப்பிரச்சினை தீருவு சம்பந்தமாக இந்தியாவின் மெளனம் எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை வாழ் தமிழர்களின் மனதில் இந்திய அரசாங்கத்தைப் பற்றி சந்தேகம் எழுந்திருந்த வேளையில் இந்தியாவின் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமான கருத்துக்கள் எமக்கு உற்சாகத்தை அளிக்கின்றது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தன் தெளிவான முறையிலே தமது நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதை வரவேற்கின்றோம்.
இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளரின் அறிக்கையின்படி; இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும், அதிகார பகிர்வு மூலமாக இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இடம் பெற்ற மனிதவுரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணையும் இனப்பிரச்சினை தீர்வும் ஒரே நேரத்தில் முன்னெடுப்பதிலுள்ள யதார்த்த ரீதியான சிக்கல்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் தமிழ் கூட்டமைப்பினர் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளிலேயே அதிகமாக கவனம் செலுத்துவது தீர்வை எட்டக்கூடிய தாக இருக்கும்.
அண்மைக் காலமாக நான் வலியுறுத்தி வந்ததைப் போன்று தமிழ் கூட்டமைப்பினர் அனைத்து தரப்பினரிடமும் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.
அண்மையில் தமிழ் சிவில் சமூகத்தின் கருத்துக்களை கூட்டமைப் பினர் செவிமடுத்திருப்பதும், இந்திய அரசாங்கத்தின் கருத்துகளின் படி இந்தியா வின் உதவியையும் வரவேற்றிருப்பதும் இனப் பிரச்சினை தீர்வில் முன்னேற்றத் திற்கான வழிவகையினை காட்டுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply