அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நிதானமாக செயற்பட்டு அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளாது தீர்வொன்றினை காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான இந்தியாவின் கருத்தை வரவேற்று சம்பந்தன் எம்.பி. வீரகேசரிக்கு அறிக்கையொன்றினை விடுத்திருந்தார். இதில் இந்தியாவின் கருத்தினை செவிமடுத்து இலங்கை அரசு செயற்பட வேண்டும் என்று தெவித்திருந்தார். இந்த செய்தியில் நிதானமாக செயற்பட்டு விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு தீர்வினை காண்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நிதானமாக செயற்பட்டு அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளாது தீர்வினை காண்போம் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்றைய செய்தியில் அது தவறாக பிரசுரமாகியிருந்தது. தவறுக்கு வருந்துகின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply