கிளிநொச்சி மண்ணில் ஒரு முதியோர் இல்லம்

உறவுகளே எம் தேசத்தில் நடந்து முடிந்த யுத்தக் கொடுமையினால் இழப்புக்கள் எத்தனையோ. இதில் இழப்பதற்கு ஏதுமின்றி மிஞ்சியிருக்கும் எங்கள் சொந்தங்களான அந்த உறவுகளுக்கு, இராமருக்கு அணில் உதவியது போல், உதவும் உறவுகளாகிய நாமும் எம்மால் முடிந்த உதவியை புரிந்து வருகின்றோம்.

அந்த வகையில் போரிலே அனைத்தையும் இழந்ததோடு மாத்திரமல்ல பெற்றெடுத்த பிள்ளைகளையும் பறிகொடுத்து விட்டு ஆதரவு ஏதுவுமின்றி தவிக்கும் வயதான பெற்றோரை அழைத்து வந்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் எந்தவித கட்டணமுமின்றி வைத்து பராமரிப்பதற்காக நாம் எடுத்த முயற்சியால் இன்று கிளிநொச்சி மண்ணில் ஒரு வயோதிபர் இல்லம் கட்டி முடிக்கப்பட்டு 2012 தை மாதம் திறக்கப்படவிருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். உங்களுக்கு தெரிந்து பெற்றெடுத்த பிள்ளைகளையும் பறிகொடுத்து விட்டு ஆதரவு ஏதுவுமின்றி தவிக்கும் வயதான பெற்றோர்கள் வடகிழக்கில் இருப்பார்களாயின் உடனடியாக அந்த விபரத்தை எமக்கு அறியத்தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இச்செய்தியை எங்கெங்கு உங்களால் எடுத்துச்செல்ல முடியுமோ அங்கெல்லாம் எடுத்துச் கெல்லும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

சு.வெற்றிமயில்நாதன்
vetti31@hotmail.com.
0041 765 76 80 89
http://www.annai.ch

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply