போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலிகளுக்கு இலங்கை சுங்கத்துறை வரி விதித்தமைக்கு தொண்டு அமைப்பு கடும் விசனம்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட சக்கர நாற்காலிகளுக்கு இலங்கை சுங்கத்துறை வரி விதித்தமை தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

யோக்ஷெயரைச் சேர்ந்த பிசியோநெட் என்னும் தொண்டு நிறுவனம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 322 சக்கர நாற்காலிகளை அனுப்பியுள்ளது.

அந்த நாற்காலிகளுக்கு 8000 டாலர்கள் வரை இலங்கை சுங்கத்துறையால் வரி விதிக்கப்பட்டதாகவும், அந்தப் பொருட்களை சுங்கத்துறையில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு சுங்கத்துறை மிகுந்த தாமதத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரான பீட்டர் தோம்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள ஒரு தமிழர் தொண்டு அமைப்பு, ஒரு றோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகியவற்றுடன் சேர்ந்து தாம் இந்த சக்கர நாற்காலிகளை இலங்கைக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தொண்டு நிறுவனங்களுக்காக கொண்டுவரப்படும் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் இலங்கையில் சுங்கவரிக்கு உட்பட்டவையே என்று இலங்கைச் சுங்கத்துறைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதிக்கான பொருட்களை அனுமதிப்பதற்கு பல அரசாங்க அமைச்சுக்களின் அங்கீகாரம் தேவைப்படுவதாலேயே தாமதம் ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply