ஆளும் ஐக்கிய முன்னணிக்குள் முரண்பாடு

முழுமையான கலந்துரையாடல்கள் எதுவும் இன்றி உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டம் கொண்டுவரப்படுமாயின் அதுகுறித்து சுயாதீனமான தீர்மானம் மேற்கொள்ள நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விரிவான கலந்துரையாடல்கள் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சில சொத்துக்களுக்கு புத்துயிர் அளித்தல் சட்டம் மற்றும் தனியார் ஓய்வூதிய சட்டம் ஆகியன இதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்கப்படும் முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களிடையே முழுமையாக கலந்துரையாடப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு புறம்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற பட்சத்தில் அரசாங்கமும் நாட்டு மக்களும் பெரும் சிரமங்களுக்குள்ளாக நேரிடலாமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply