வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக்கு 175 மாணவர்கள் சேர்ப்பு

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 2012 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுனர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோர் முகாமாக பயன்படுத்தப்பட்டதால் இந்த கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்ட சீர்குலைவுகள் காரணமாக 2009 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்வி சார் பகுதிகளும், ஐந்து மாணவர் விடுதிகளும் புனரமைக்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டில் 165 பயிலுனநர்கள் பாடநெறிகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதால் 2012 ஆம் ஆண்டுக்காக 175 பயிலுநர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி கே.பெர்னாட் தெரிவிக்கிறார்.

2012 ஆம் ஆண்டிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கான தெரிவுக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பதிவுகள் ஜனவரி மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply