நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நாம் முற்றாக நிராகரிக்கவில்லை

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துவிடவில்லை. கூட்டமைப்பும் அரசும் நடத்தும் பேச்சுக்களில் காணப்படும் இணக்கப்பாடுகளை ஆராய்வதாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு அமையவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடும் போக்கை பின்பற்றுகின்றது. புலிகளின் கோட்பாடுகளுக்கமைய செயற்படுகின்றது என்ற ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றோம்.

1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டுள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலும் மேற்கொண்ட அரசியல் முயற்சிகளின் அடிப்படையிலும் நியாயபூர்வமாக நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply