காணி அதிகாரம் வழங்குவது குறித்து அரசு பேசத்தயார்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை அமுல்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் கலந்துரையாடவுள்ளது.

‘காணி பற்றி மாத்திரமல்லாமல் ஏனைய பல விடயங்கள் குறித்தும் நாம் பேசவுள்ளோம் என அரசாங்கத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு நேற்று தெரிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கலந்துரையாட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருமானால் அது நேர விரயமாகும் என அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னர் கூறியிருந்தமை குறிபபிடத்தக்கது. “அவர்கள் இவ்விடயம் குறித்து பேச விரும்பினால் இப்பேச்சுவார்த்தையை தொடர்வதில் அர்த்தமில்லை” என கடந்த வியாழனன்று நடைபெற்ற அமைச்சர் ரம்புக்வெல்ல கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே காணி அதிகாரம் குறித்து பேசத் தயார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

இதேவேளை, இதற்கு அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என அக்கட்சியின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.

ஜனவரி 17,18, 19 ஆம் திகதிகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சர் நிமல் கூறினார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் த.தே.கூ. பங்குபற்றுமா என்பது குறித்து கேட்டபோது. இன்று அவர்கள் இல்லை என்று கூறலாம், நாளை அவர்கள் மாறாலாம் என பதிலளித்தார்.
த.தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், ‘காணி விவகாரம் குறித்து விட்ட இடத்திலிருந்து நாம் பேச ஆரம்பிப்போம் என்றார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் த.தே.கூ. பங்குபற்றுவது குறித்து கூறுகையில், காணிப் பாவனை, வரி, பொலிஸ்அதிகாரம், மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரங்கள் உட்பட பல வியடங்கள், மத்திய, மாகாண அரசுகளுக்கிடையில் அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பன உட்பட பல விடயங்களில் இணக்கபாடு ஏற்படும் போது மாத்திரமே இத்தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply