அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகள் இவ்வாண்டு மேலும் அதிகரிக்கும்
2012 இல் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் இவ்வாண்டு மேலும் விரிவடையும். அமெரிக்காவின் பொருளாதார நிலை வலுப்பெற்று வருவதாலும், இருநாடுகளிடையேயும் புதிய வர்த்தக வாய்ப்புகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இந்த வளர்ச்சியடைய வாய்ப்புகள் காணப்படுவதாக அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஜய ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து ஆடைகள், இறப்பர், பெறுமதி வாய்ந்த, மாணிக்கக்கற்கள், தேயிலை, கோப்பி, வாசனைத்திரவியங்கள், இரசாயன பதார்த்தங்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் போன்றன ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. விமானங்கள், விமான உதிரிப்பாகங்கள், சீரியல் வகைகள், இயந்திரங்கள், பருத்தி துணி வகைகள், கடதாசி மற்றும் கடதாசி அட்டைகள் மற்றும் ஃபெப்ரிக் துணி வகைகள் போன்றன இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இலங்கையின் ஆடை உற்பத்திகளின் ஏற்றுமதிக்கான இரண்டாவது மிகப்பெரிய நாடாக அமெரிக்கா திகழ்வதுடன், இது இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்டும் 40 வீதமான ஆடைகளை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மொத்தமாக 1.77 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply