கிருஷ்ணாவின் பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனவரி மத்தியில் இலங்கை செல்லக்கூடும் என இந்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. அவை மேலும் கூறியது:
எஸ்.எம். கிருஷ்ணா பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், அவை பற்றிய விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது.
கிருஷ்ணா எந்தத் தேதியில் பயணம் மேற்கொள்வார் என்பது பற்றி எதுவும் முடிவாகவில்லை. எனினும், இம்மாதம் மத்தியில் அவர் பயணம் மேற்கொள்ளக்கூடும்.
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த வடக்கு – கிழக்குப் பகுதி மக்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் 49 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை அரசியலமைப்பு சாசன சட்டத்திருத்தம் 13-ன் படி, மாகாணங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுடன் பேச்சு நடத்தவே இலங்கைக்கு கிருஷ்ணா வருகிறார் என அந்த நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
கிருஷ்ணாவும் இலங்கை அதிபரும் எவை குறித்து விவாதிக்க உள்ளனர் என்பது பற்றிய தகவல்களைக் கூற இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
2010 நவம்பரில் இலங்கைக்கு கிருஷ்ணா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply