இந்தியா கேட்டால் பிரபாகரனை கையளிப்போம்: ரோகித்த

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இந்தியாவிடம் கையளிப்பது பற்றி அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்தார்.
 
இராணுவத்தினரால் பிரபாகரன் கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில், அவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்தால் அதனைச் சாதகமாகப் பரிசீலிக்க தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக போகல்லாகம கூறினார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கவில்லையெனச் சுட்டிக்காட்டிய போகல்லாகம, இந்தியாவிலுள்ள சில தனிநபர்களே இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருப்பதாகக் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் நன்கு அறிந்துகொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இல்லை என்பதை சர்வதேச சமூகம் ஏற்றக்கொண்டுள்ளது என்றார் அமைச்சர் ரோகித்த போகல்லாகம.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply