ஒன்றுபட்ட இலங்கைக்குள் அர்த்தம் பொதிந்த அரசியல் தீர்வு

சர்வதேச சூழல் பொருந்தி வருகின்ற இன்றைய நிலையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய அர்த்தம் பொதிந்த அரசியல் தீர்வு ஒன்றை காண்கின்ற போதே நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி இந்த மண்ணில் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் மேம்பாட்டிற்காக எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கிராம அமைப்புக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அண்மையில், கரைச்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் நாகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீள் குடியேற்றம், மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தி என்பவை குறித்து நாம் அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

மீள் குடியேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த உண்மை இப்பிரதேசங்களுக்கு வருவதன் மூலம் தான் ஏனையோருக்கு தெளிவு படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில்,கிளிநொச்சியில் உள்ள விநாயகபுரம் விடிவெள்ளி கழகத்திற்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், சந்திரோதயா விளையாட்டுக் கழகத்திற்கு 25ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், வட்டக்கச்சி மாவடியம்மன் விளையாட்டு கழகத்திற்கு 50ஆயிரம் பெறுதியான விளையாட்டு உபகரணங்களும், வட்டக்கச்சி இளங்கதிர் விளையாட்டு கழக திருத்தத்திற்கு 25ஆயிரம் ரூபாவும், உருத்திரபும் உழவர் ஒன்றிய விளையாட்டு கழகத்திற்கு 25ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பாரதிபுரம் மத்தி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 1இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்களும், விநாயகர் குடியிருப்பு மாதர் அபிவிருத்தி சங்கத்திற்கு 75ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்களும், சிறகுகள் பண்பாட்டு பேரவைக்கு 48ஆயிரம் ரூபா பெறுமதியான அலுவலக உபகரணங்களும், பொன்னகர் மத்தி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 75ரூபா பெறுதிமதியான சிறுவர் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

ஆலயங்களுக்கான ஒதுக்கீட்டில் சென். பற்றிமா தேவாலயத்திற்கு ஒருஇலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்களும், உதயநகர் மேற்கு அற்புத விநாயகர் ஆலயத்திற்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பெருக்கித் தொகுதியும், வன்னேரிக்குளம் ஐயனார் ஆலயத்திற்கு 50ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி தொகுதியும் வழங்கப்பட்டதுடன் சென். செபஸ்ரியான் ஆலய திருத்தத்திற்கு 48 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா, உதவி தவிசாளர் நகுலேஸ்வரன், உறுப்பினர்களான பாலாசிங்க சேதுபதி, பொன்னம்பலநாதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராசா, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரபாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக கணக்காளர் உட்பட கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply