எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவொன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துள்ளது.
ஊடக சுதந்திரம் மற்றும் இலங்கையில் ஊடகத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்தே ரணில் விக்ரமசிங்க தலைமையில், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்தரிகளைச் சந்தித்தனர்.
அமெரிக்கா, ஜேர்மன், ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
மக்களின் தகவலறியும் உரிமை குறித்து உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக இராஜதந்திரிகள் உறுதியளித்திருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply