கூட்டமைப்பு தென் ஆபிரிக்கா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பேர் கொண்ட தூதுக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தென் ஆபிரிக்காவின் தலைநகர் டர்பன் நோக்கி பயணமாகின்றது.

இத்தூதுக்குழுவிற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை வகிக்கின்றார். குழுவில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தென் ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்குபற்றுவதற்காகவே கூட்டமைப்புத் தூதுக்குழு தென்னாபிரிக்கா செல்கின்றது.

அந்நிகழ்வில் பங்குபற்றவரும் உலக ராஜதந்திரிகளையும் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கும் சந்தர்ப்பத்தையும் கூட்டமைப்புகுழு பயன்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply